2019ல் அடியெடுத்து வைக்கும் மிதுன ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 6-ம் வீட்டிலும், சனி பகவான் 7-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் எதையும் தைரியத்தோடு செய்யும் துணிவு ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று தள்ளி வைக்கவும். கண்டச்சனியின் பிடியில் இருப்பதால் மனதில் ஒரு வித பயம் இருக்கும், இருப்பினும் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்து முடிக்கவும். எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் புத்திசாலி நீங்கள். வீண் கோபத்தை குறைப்பதால் பல வகையில் நன்மை உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பொருளாதார நிலை எதிர்பார்த்தது போல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படவும். அடுத்தவர்களின் ஆலோசனையை விட, உங்களின் சுயஅறிவே பயன்படுத்துவதால் பல இடங்களில் வெற்றி பெற முடியும். ஆன்மீக பணிகளுக்காக பணம் நிறைய செலவாகும். குடும்பத்தினருடன் சென்று குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் சொல்ல வேண்டாம். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு. எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ முடியும். சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வேறு வீட்டிற்கு மாறி செல்வர். ஆடை, ஆபர்ண பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும். கடன் பிரச்சனை ஓரளவு தீரும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். தெய்வ வழிபாடு மூலம் நல்வழி கிடைக்கும். உங்கள் தேவைகள் நாளடைவில் பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் இதுவரை தடைபட்டுவந்த சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும். மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய வேலைக்கு மாறுவது தொடர்பான யோசனை வரும். தொழில், வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாளவும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும். உங்கள் நேர்த்தியான அணுகுமுறையால் பல வெற்றிகள் குவியும் ஆண்டாக அமையும்
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் வரும் வியாழக்கிழமையில் லக்ஷ்மி நரசிம்மரை விரதம் இருந்து வழிபடவும்
முக்கிய குறிப்பு : இந்த 2019-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831